நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை, வல்லவர்பால் மலிந்து ஓங்கிய சொல்லானை, தொல் மதில் காழியே கோயில் ஆம் இல்லானை, ஏத்த நின்றார்க்கு உளது, இன்பமே.
| [ 1]
|
நம் மானம் மாற்றி நமக்கு அருள் ஆய் நின்ற பெம்மானை, பேய் உடன் ஆடல் புரிந்தானை, அம்மானை, அந்தணர் சேரும் அணி காழி எம்மானை, ஏத்த வல்லார்க்கு இடை இல்லையே.
| [ 2]
|
அருந்தானை, அன்பு செய்து ஏத்தகில்லார்பால்; பொருந்தானை, பொய் அடிமைத் தொழில் செய்வாருள விருந்தானை; வேதியர் ஓதி மிடை காழி இருந்தானை; ஏத்துமின், நும் வினை ஏகவே!
| [ 3]
|
புற்றானை, புற்று அரவம் அரையின்மிசைக் சுற்றானை, தொண்டு செய்வார் அவர்தம்மொடும் அற்றானை, அந்தணர் காழி அமர் கோயில் பற்றானை, பற்றி நின்றார்க்கு இல்லை, பாவமே.
| [ 4]
|
நெதியானை, நெஞ்சுஇடம் கொள்ள நினைவார்தம் விதியானை, விண்ணவர்தாம் வியந்து ஏத்திய கதியானை, கார் உலவும் பொழில் காழி ஆம் பதியானை, பாடுமின், நும் வினை பாறவே!
| [ 5]
|
Go to top |
செப்பு ஆன மென்முலையாளைத் திகழ் மேனி வைப்பானை, வார் கழல் ஏத்தி நினைவார்தம் ஒப்பானை, ஓதம் உலாவு கடல் காழி மெய்ப்பானை, மேவிய மாந்தர் வியந்தாரே.
| [ 6]
|
துன்பானை, துன்பம் அழித்து அருள் ஆக்கிய இன்பானை, ஏழ் இசையின் நிலை பேணுவார் அன்பானை, அணி பொழில் காழிநகர் மேய நம்பானை, நண்ண வல்லார் வினை நாசமே.
| [ 7]
|
குன்றானை, குன்று எடுத்தான் புயம்நால் ஐந்தும் வென்றானை, மென்மலரானொடு மால் தேட நின்றானை, நேரிழையாளொடும் காழியுள நன்றானை, நம்பெருமானை, நணுகுமே!
| [ 8]
|
சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர் மேவாத சொல் அவை கேட்டு வெகுளேன்மின்! பூ ஆயகொன்றையினானைப் புனல் காழிக் கோ ஆய கொள்கையினான் அடி கூறுமே!
| [ 9]
|
கழி ஆர் சீர் ஓதம் மல்கும் கடல் காழியு ஒழியாது கோயில்கொண்டானை, உகந்து உள்கித் தழி ஆர் சொல் ஞானசம்பந்தன் தமிழ் ஆர மொழிவார்கள், மூஉலகும் பெறுவார்களே.
| [ 11]
|
Other song(s) from this location: சீர்காழி
1.019
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிறை அணி படர் சடை
Tune - நட்டபாடை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.024
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடல் ஏறு அமரும் கொடி
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அயில் உறு படையினர்; விடையினர்;
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.081
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லார், தீ மேவும் தொழிலார்,
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.102
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உரவு ஆர் கலையின் கவிதைப்
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.126
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று
Tune - வியாழக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.129
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சே உயரும் திண் கொடியான்
Tune - மேகராகக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.011
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம்வல்லானை,
Tune - இந்தளம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
Tune - இந்தளம்
(சீர்காழி )
|
2.049
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பண்ணின் நேர் மொழி மங்கைமார்
Tune - சீகாமரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.059
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நலம் கொள் முத்தும் மணியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.075
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.096
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொங்கு வெண்புரி வளரும் பொற்பு
Tune - பியந்தைக்காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.097
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நம் பொருள், நம் மக்கள்
Tune - நட்டராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடி இலங்கும் திருமேனியாளர், புலி
Tune - செவ்வழி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.022
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்,நெஞ்சு
Tune - காந்தாரபஞ்சமம்
(சீர்காழி )
|
3.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல்லால் நீழல் அல்லாத் தேவைநல்லார்
Tune - கொல்லி
(சீர்காழி )
|
3.043
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சந்தம் ஆர் முலையாள் தன
Tune - கௌசிகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.118
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மடல் மலி கொன்றை, துன்று
Tune - புறநீர்மை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.082
திருநாவுக்கரசர்
தேவாரம்
பார் கொண்டு மூடிக் கடல்
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.083
திருநாவுக்கரசர்
தேவாரம்
படை ஆர் மழு ஒன்று
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
5.045
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாது இயன்று மனைக்கு இரு!
Tune - திருக்குறுந்தொகை
(சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
|
7.058
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை
Tune - தக்கேசி
(சீர்காழி பிரமபுரியீசுவரர் திருநிலைநாயகியம்மை)
|
8.137
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பிடித்த பத்து - உம்பர்கட் ரசே
Tune - அக்ஷரமணமாலை
(சீர்காழி )
|
11.027
பட்டினத்துப் பிள்ளையார்
திருக்கழுமல மும்மணிக் கோவை
திருக்கழுமல மும்மணிக் கோவை
Tune -
(சீர்காழி )
|